ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விவகாரம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ,அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விவகாரம்  - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
x
சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ,அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா  தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட  நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்கு போராடி வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கடும்  ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும்   இதனால் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளர். மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் வழங்கப்படுவதையும், அவசர தேவைகளுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்