ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை

சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே ஆக்சிஜன் வழங்கியது.
ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை
x
ஆக்சிஜன் வழங்கிய மாவட்ட நிர்வாகம்.. அரசு உதவியால் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை 

சேலத்தில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன்  இருப்பு இல்லாததால் 20 நோயாளிகள் அவதிப்படுவதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனே  ஆக்சிஜன் வழங்கியது.சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அப்போது, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதியளவு ஆக்சிஜன் இருப்பு இல்லாததால், சிகிச்சை பெறுபவர்களை, மாற்று மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளுமாறு, மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, தற்காலிகமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்