"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
x
"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்  

திருச்சி பெல் நிறுவனம் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற தனியார் நிறுவனங்களிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு பொதுத்துறை மற்றும்  தனியார் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க மத்திய, மாநில அரசுகளும் வங்கிகளும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு துரிதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், இந்தியாவில் ஆக்கிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்