16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் 27ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும்,சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்