மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு
மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்..  மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு
x
மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்..  மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

சென்னை மெரினா கடற்கரையில் 900 தள்ளு வண்டி கடைகளில் மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்க கோரிய வழக்கில் வழக்கில் தமிழக அரசு  பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில்  , 900 தள்ளுவண்டி கடைகளில் 5 சதவீதத்தை மாற்று திறனாளிகளுக்கு சட்டப்படி  வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 47கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருவதாகவும், குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளு வண்டிகள் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறை படுத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மத்திய அரசின் சிறப்பு திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டங்களில், மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம்  வழங்க வேண்டுமென மாற்றுதிறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்ருந்தது. இந்த தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்