சித்ரவதையில் சிதைந்த 2 குழந்தைகள் - விருத்தாசலம் தம்பதியின் அரக்க குணம்

இரு குழந்தைகளை அடைத்து வைத்து அரக்கத்தனமாக கொடுமைப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். மனிதமே மரித்துபோன இந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சித்ரவதையில் சிதைந்த 2 குழந்தைகள் - விருத்தாசலம் தம்பதியின் அரக்க குணம்
x
இரு குழந்தைகளை அடைத்து வைத்து அரக்கத்தனமாக கொடுமைப்படுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். மனிதமே மரித்துபோன இந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

விருத்தாசலத்தைச் சேர்ந்த தங்கராஜ், மாரியம்மாள் தம்பதியர் கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த நிலம்பூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்தனர். அவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நிலையில், அந்த வீட்டுக்குள் இருந்து பூனை முனகுவதை போல், நாள்தோறும் சத்தம் வந்துள்ளது. ஜன்னல் வழி எட்டிப்பார்த்த அக்கம்பக்கத்தினர், உள்ளே இருந்த குழந்தைகளுக்கு உணவும், தண்ணீரும் கொடுத்துள்ளனர்.ஏழை தம்பதிகள், குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் நினைத்துள்ளனர்.ஆனால், தினமும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்த தம்பதி, ஜன்னலையும் மூடிச் சென்றுள்ளனர். தம்பதியின் அன்றாட நடவடிக்கையும், குழந்தைகளின் நிலையையும் பார்த்துவந்த வடமாநில தொழிலாளி ஒருவர், உள்ளூர் மக்களிடம் நிலைமையை போட்டு உடைத்தார்.அதைத் தொடர்ந்து குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். அப்போதுதான்  இரக்கமற்ற, மனித குணமே இல்லாத, தாக்குதலுக்கு குழந்தைகள் ஆளானதும், 6 வயதும், 3 வயதும் ஆன உடன்பிறந்த குழந்தைகள், மண்புழுவாய் சுருண்டு கைகளில் நெகிழ்ந்தனர். கண்கள் வீங்கிய நிலையில் ஒரு குழந்தையையும், உடல் வற்றி போன சோமாலியா குழந்தையை போல் மற்றோர் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தம்பதியை கைது செய்து விசாரித்ததில், குழந்தைகளின் தாய் மகேஷ்வரி இறந்துவிட, தந்தை தங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. மேலும், 2-வது மனைவியாக வந்த மாரியம்மாள் என்பவர் தான் குழந்தைகளுக்கு இந்தக் கொடுமைகளையும் செய்ததும் அம்பலமானது. ஆனால், யாருமற்ற நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு கருதியே வீட்டை பூட்டி வைத்ததாக தம்பதியினர் விளக்கம் அளித்துள்ளனர்.தந்தைக்கு 2ஆம் தாரமாக வந்தவரின் சித்ரவதையில், ஏதுமறியா பிஞ்சுகள், துவண்ட மாலையாய் மீட்கப்பட்ட சம்பவம் தாங்க முடியா துயரம்.


Next Story

மேலும் செய்திகள்