தொடர்மழையால் குளம் போல் காட்சியளிக்கும் சாலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கீழ்க்குடி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
தொடர்மழையால் குளம் போல் காட்சியளிக்கும் சாலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த வழியாக வீடுகளுக்கு செல்லும் வாகனங்கள்  சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்