தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை துவங்கியது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன் தலைமையில் இன்று மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் போட்டியிடுகின்றனர். இதுபோல, துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 
தேர்தலில் ஆயிரத்து 303 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள். காலை 8.30 மணி அளவில் டி.ராஜேந்தர் தனது வாக்கை செலுத்திய நிலையில், சங்க உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். 
கண்காணிப்பு  கேமரா மூலம் வாக்கு பதிவு கண்காணிக்கப்படுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு நாளை 23 ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்