"7.5 % உள் ஒதுக்கீடு - நடப்பு ஆண்டே நிறைவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
x
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சட்ட மசோதா நடப்பு ஆண்டிலேயே நிறைவேறாவிட்டால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றாலும், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்தில் நல்ல முடிவு தெரியும் என நம்புவதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்