"புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு முறையான ஊதியம் வழங்கும் வரை, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தனியார் பொறியில் கல்லூரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
x
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு முறையான ஊதியம் வழங்கும் வரை, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தனியார் பொறியில் கல்லூரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் கிருஷ்ணசமுத்திரத்தை  சேர்ந்த கே. எம். கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியம் இன்றி மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும்,  பலர் பிரியாணி கடைகள்,  உணவகங்களில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

உயர்நீதிமன்ற உத்தரவு படி அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலித்த நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய முறைப்படி ஊதியம் வழங்கவில்லை  என சுட்டிக்காட்டி உள்ளார் மனுதாரர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் ஊதியம் கொடுத்து நிலையில், பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

அண்ணா பல்கலைக் கழக  இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்தும்   எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.  இதனிடையே, தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 விண்ணப்பங்களை பெற்றுள்ளன. 461 பொறியியல் கல்லூரிக்காக இந்த சேர்க்கை நடை பெறுகிறது. இதில் 90 சதவீத கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்  ஏராளமான ஆசிரியர்களை, கல்லூரி  நிர்வாகம் பல மாதங்களுக்கு முன்பே பணி நீக்கம் செய்து உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்றும், அவர்களுக்கு முறையான ஊதியம்  வழங்கப்பட்டு உள்ளதா என்பதை  உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

அதுவரை, பொறியியல் சேர்க்கைக்கான,  கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் நீதிபதிகள்  கிருபாகரன் , புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தேவைக்கு ஏற்ப கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுடன், தனியார் கல்லூரிகளை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்