பொது ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்படுமா? - ஆட்சியர்கள், மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
பொது ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்படுமா?  - ஆட்சியர்கள், மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை
x
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இருப்பினும் தீபாவளி-பண்டிகை காலம் வருவதால் தொற்று அதிகரிக்கலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முதலமைச்ச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  மருத்துவக் குழுவுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையை தொடங்குவது மற்றும் திரையரங்குகள் திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்