இரு வரிகளை மட்டும் படித்துவிட்டு பேசுவதா? - குஷ்பு குற்றச்சாட்டு

மநு ஸ்மிருதியில் உள்ள இரு வரிகளை மட்டும் படித்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுவதாக குஷ்பு குற்றம்சாட்டினார்.
x
பெண்கள் குறித்து மநு ஸ்மிருதியில் இழிவாக உள்ளதாக திருமாவளவன் சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையானது. அதைக் கண்டித்து, திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து குஷ்பு காலையில் புறப்பட்டார். அவரை முட்டுக்காடு பகுதியில் மறித்து கைது செய்த போலீசார், தையூரில் உள்ள தங்கும் விடுதியில் வைத்தனர். பின்னர், மாலை 5 மணிக்கு குஷ்பூவை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ,  திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், எந்த கடவுளும் இல்லை என சொல்லத் தயாரா எனவும் அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்