அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை - மருத்துவ நிபுணர் குழு தீவிர கண்காணிப்பு

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா பாதிப்பால், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில், மருத்துவ நிபுணர் குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும், தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்