கல்வி ,வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு" - "வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம்"

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
x
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும்  தமிழக ஆட்சியாளர்கள் கடந்த  40 ஆண்டுகளாக காதில் வாங்காமல் கடந்து செல்வது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது 
என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும்  அந்த ஆணையம் அதன் அறிக்கையை திசம்பருக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும்  அதை செய்ய அரசு தயங்கினால் பாட்டாளி மக்களைத் திரட்டி, தொடர் சாலைமறியலை விட கடுமையான போராட்டத்தை நடத்துவதை வேறு வழியில்லை என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்து கொள்வதாகவும் ராமதாஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்