ரூ.100 கோடியில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலை - திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐ.டி.சி நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செயல்பட்டு வரும் ஐ.டி.சி தொழிற்சாலை 100 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்