48 அடியை எட்டிய கே.ஆர்.பி அணை - 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளது.
48 அடியை எட்டிய கே.ஆர்.பி அணை - 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை 48 அடியை எட்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து 300 கனஅடியாக உள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையானது, 50 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறக்கப்படும். இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றில் விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்