விறகு கரி ஏற்றுமதி பாதிப்பு - ஒரு லட்சம் விறகு கரி மூட்டைகள் தேக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விறகு கரி ஏற்றுமதி பாதிக்கபட்டுள்ளதால் ஒரு லட்சம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
விறகு கரி ஏற்றுமதி பாதிப்பு - ஒரு லட்சம் விறகு கரி மூட்டைகள் தேக்கம்
x
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் விறகு கரி ஏற்றுமதி பாதிக்கபட்டுள்ளதால் ஒரு லட்சம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பரமக்குடி, பார்த்திபனூர், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் கரிமூட்டம் போடுவது பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான கரி, தற்போது 12 ரூபாயாக குறைந்து, 50 சதவீதத்திற்கு மேல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், கொரோனா பரவலால், முழுமையான போக்குவரத்து வசதி இன்றி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதானல், பரமக்குடி தாலுகாவில் மட்டும் ஒரு லட்சம் கரிமூட்டைகள் தேக்கமடைந்து, பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்