"நாளை முதல் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை" - முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நாளை முதல் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நாளை முதல் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்ததை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். .


Next Story

மேலும் செய்திகள்