15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர், புதுக்கோட்டை,  திருச்சி,  பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல்,  தேனியில், 
இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக கூடும் என்றும், இது  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப் பெறக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில், சூறாவளி காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்