குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
x
தசரா விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோயில் கொடிக் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தசரா விழாவுக்காக கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாருமின்றி மிகவும் எளிமையாக கொடியேற்ற விழா நடந்தது. மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ள முத்தாரம்மன் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்றைய தினம், முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை  கோலத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்