மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழக்கு - கண் கலங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்
x
நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், எப்போது கலந்தாய்வு மற்றும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கானது, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வர, தமிழக அரசிடம் இருந்து, தகவலை பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்றார். மேலும், நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது, காலக்கெடுவையும் விதிக்க இயலாது என தெரிவித்துள்ளார். அதற்கு, முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? என்ற நீதிபதிகள், முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனை தெரிவிக்கலாமே என கேள்வி எழுப்பினர். மேலும், அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது என கூறினார் . தொடர்ந்து பேசிய நீதிபதி கிருபாகரன், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கியதுடன், ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என எண்ணுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்