பண மோசடி தொடர்பாக நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு -மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி தொடர்பாக நடிகர் சூரி தொடர்ந்த வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2015ல் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்த போது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரின் தந்தை ரமேஷ் குடவாலாவுடன் நடிகர் சூரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சூரிக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வில்லங்கமான நிலத்தை வாங்க மறுப்பு தெரிவித்த சூரிக்கு 40 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்ப தரப்பட்டது. மீதமுள்ள 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை பல வருடங்களாகியும் திருப்பி தரவில்லை என கூறிய சூரியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை சிபிஐ க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு  நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்