விவசாயிகளின் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படுகிறது - திமுக தலைவருக்கு, அமைச்சர் காமராஜ் பதில்

விவசாயிகளின் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.
விவசாயிகளின் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படுகிறது - திமுக தலைவருக்கு, அமைச்சர் காமராஜ் பதில்
x
2019-20 கொள்முதல் பருவத்தில் 2 ஆயிரத்து135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, அதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக கூறியுள்ளார். வழக்கமாக திறக்கும், ஆயிரத்து 500 கொள்முதல் நிலையத்துக்கு பதிலாக, இரண்டாயிரத்து 135 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 

ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் வரத்து உள்ள இடங்களில், கூடுதலாக ஒரு கொள்முதல் நிலையம் திறக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். எவ்வித உச்ச வரம்புமின்றி நெல் கொள்முதல் செய்வதாக கூறும் அமைச்சர், கள நிலவரம் அறியாமல், எதிர்கட்சித் தலைவர் குறை கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்