"நீட் தேர்வு முடிவுகளை தடை செய்க";உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு - அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
x
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பாக வழக்கறிஞர் பிரசன்ன ராஜன் இந்த முறையீட்டை முன்வைத்தார். மருத்துவக் கல்வி உள்ஒதுக்கீடு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இன்றே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்