கர்நாடகாவில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - கர்நாடக முதல்வருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
x
கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக கர்நாடகாவில் உள்ள தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும்,பல தமிழ் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் இயங்குவதாக சங்கத்தினர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்தின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்