திரையரங்குகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா அச்சத்தால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரை அரங்குகள், வருகிற 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
x
கொரோனா அச்சத்தால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரை அரங்குகள், வருகிற 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. திரையரங்குக்கு வருவோர் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும், திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளிவிட்டு இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்