புறநகர் ரயிலில் அரசு ஊழியர்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு

அக்டோபர் 5-ஆம் தேதி முதல், அத்தியாவசிய சேவைத்துறையை சார்ந்த மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
x
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், புறநகர் ரயிலில் அக்டோபர் 5-ஆம் தேதி முதல், அத்தியாவசிய சேவைத்துறைக்கான அரசு ஊழியர்கள் தங்களது அடையாள அட்டை காட்டி பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் பயணிக்கும், அரசு ஊழியர்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் பயணிக்க வரும் அரசு ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை அவசியம் என்றும் குறிப்பிட்ட வெப்ப நிலை இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்