செயல்திறன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
x
சென்னை தீவுத்திடலில் நடந்த அரசு விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் 92 வார்டுகளில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8 ஆண்டுகளுக்கு குப்பைகள் அகற்றும் பணியை ஸ்பெயின் நாட்டு நிறுவனம் செய்ய உள்ளது.  இந்த திட்டத்திற்கு உதவும் வகையில், இ- ரிக்‌ஷாக்கள், 300 கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், 3 ஆயிரம் பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்