"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை நிர்வாகம்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
x
மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ நிலை அறிக்கையில், பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பிறகு விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது நோய் தொற்றுக்கான அறிகுறி இல்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தொடர் மருத்துவ சேவையால், விஜயகாந்த் உடல் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்