நாளையுடன் நிறைவடைகிறது 8ம் கட்ட ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
x
கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 8ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார். மேலும், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், மேலும் கூடுதலாக தளர்வுகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்