விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
x
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இந்தநிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக, தனியார் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும், அவ்வாறு சென்றபோது தென்பட்ட கொரோனா அறிகுறி உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விஜயகாந்த் தற்போது பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்