"அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது" - ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என, ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளனர்.
x
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்காக ஏற்படுத்தப்படும் புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன . இந்த நிலையில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் சிலரும், அதேபோன்று பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் என்றும் ஆராய்ச்சி திட்ட பணிகள் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்