பெரியாறு அணை கண்காணிப்பு துணை குழுவை கலைக்க கோரி மனு - மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ்

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு துணை குழுவை கலைக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
x
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாகவும் ,
முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரியும் கேரளாவை  சேர்ந்த  ஜோ ஜோசப்,  ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் ஆகியோர்  உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது,. அப்போது   இது தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும்  4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மக்களின்  நலன் மற்றும்  அணையின் பாதுகாப்பை கருதி  முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் நீரை 130 அடியாக குறைக்க   கோரி   ரசல்ஜாய் என்பவர்    ஏற்கனவே தாக்கல் செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்