கீழடியில் 6ம் கட்ட அகழ்வாய்வு பணி - வீரனின் அடையாளத்துடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வில் வீரனின் அடையாளத்துடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 6ம் கட்ட அகழ்வாய்வு பணி - வீரனின் அடையாளத்துடன்  முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
கீழடி 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகை ஈமக்காடாக கண்டறியப்பட்டுள்ளது. 
கொந்தகையில் இதுவரை 11 குழிகள் தோண்டப்பட்டு 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில்  ஒரு முதுமக்கள் தாழியினுள் ஒரு அடி நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட வாளும் மண்டை ஓடும் கிடைத்துள்ளது. இரண்டாம் நிலை   ஈமக்காட்டில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து வந்து தாழியினுள் வைத்து மீண்டும்  புதைப்பது வழக்கமாக இருந்திருக்கும் என்றும் இறந்தவர் போர் வீரனாகவோ, காவலராகவோ அல்லது இரும்பு ஆயுதத்தை விரும்புவராகவோ இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்