குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
x
கடந்த 2017ம் ஆண்டு குட்கா பொருட்களை  சட்டமன்றத்துக்கு எடுத்து வந்து காண்பித்ததாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் குழு புதிய நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்