"எல்லோருக்கும் சரி சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை நீட் தேர்வை மத்திய அரசு ரத்து வேண்டும்" - திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி வேண்டுகோள்

எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் வரை நீட் தேர்வை ரத்து வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லோருக்கும் சரி சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை நீட் தேர்வை மத்திய அரசு ரத்து வேண்டும் - திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி வேண்டுகோள்
x
மக்களவையில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ ஆணைய மசோதா தொடர்பான விவாதத்தில் திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி  பங்கேற்று பேசினார். அப்போது அவர் நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை என்பதற்காக அனிதா உட்பட 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வேதனை தெரிவித்தார் . இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விதமான கல்வி முறைகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டிய அவர் , எந்த ஒரு மாணவரும் தொழில் நல்முறை  சார்ந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.  பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பல்வேறு விதமான பாடத்திட்டம் முறைகள் இருக்கும் சூழ்நிலையில் நீட் தேர்வை நடத்துவது என்பது அநீதி  என்றும், அவர் குற்றம் சாட்டினார். நீட் தேர்வு, முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான கல்வி அமைப்பு கிடைக்கும் வரை அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்காமல் பொதுத்தேர்வு நடத்துவது என்பது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு செய்யப்படும் பாகுபாடு என்று அவர் குறிப்பிட்டார் .

Next Story

மேலும் செய்திகள்