எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி நீட்டிப்பு - விவசாயிகள் கடும் எதிர்ப்பு

எண்ணெய் கிணறு அமைக்க மூன்று ஆண்டுகள் காலம் நீடிப்பு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி நீட்டிப்பு - விவசாயிகள் கடும் எதிர்ப்பு
x
திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 24 இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கு கடந்த 2013ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்த‌து. இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியது.  இந்த நிலையில் வருகிற 2023 ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 3 ஆண்டுகள் கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரியமங்கலம் கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசி என்னை கிணற்றை முற்றுகையிட்டு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஒரு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்