காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
x
மாவட்டம் தோறும் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தி வரும் முதலமைச்சர், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுமார் 22, 436 பயனாளிகளுக்கு 331 கோடி ரூபாயில்  நலத் திட்டங்களை வழங்கிய அவர், ஆட்சியர் அலுவலகத்தில்கொரோனா நோய்த் தடுப்பு பணிகள்  குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.    742 கோடி ரூபாய் மதிப்பில், முடிவுற்ற பணிகளை துவங்கி வைத்த அவர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்