மாநிலங்களவை துணை தலைவர் பதவி - அதிருப்தியில் திருச்சி சிவா என தகவல்

மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்தும் காங்கிரஸ் முடிவை தி.மு.க தலைமை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலங்களவை துணை தலைவர் பதவி - அதிருப்தியில் திருச்சி சிவா என தகவல்
x
மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க கூட்டணி கட்சிகள் சார்பில்,  எம்.பி. ஹரிவன்ஷ் நாராயணன் சிங் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி சார்பில், பொதுவேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க தலைமை மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு திருச்சி சிவாவுக்கு கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இன்று டெல்லி புறப்பட்ட திருச்சி சிவா, இந்த முடிவுக்கு எதிர்வினையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் மிக முக்கிய பொறுப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்