பணியின்போது மயங்கி விழுந்த ரயில்வே போலீஸ் : மன அழுத்தமே காரணம் - மருத்துவர்கள் தகவல்

ரயிலில் பாதுகாப்பிற்காக சென்ற ரயில்வே போலீஸ் மன அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
பணியின்போது மயங்கி விழுந்த ரயில்வே போலீஸ் : மன அழுத்தமே காரணம் - மருத்துவர்கள் தகவல்
x
ரயிலில் பாதுகாப்பிற்காக சென்ற ரயில்வே போலீஸ் மன அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் மூன்று மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் பாதுகாப்பிற்காக சென்ற மேத்யூ என்கிற ரயில்வே போலீஸ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக ரயிலில் இருந்த பயணிகள் முதல் உதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக காவலர் மேத்யூ மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்