சென்னையில் குடிநீர் விநியோகம்: 700 மில்லியன் லிட்டர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னையில் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் குடிநீர் எவ்வித தடையுமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் விநியோகம்: 700 மில்லியன் லிட்டர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
x
இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் என மொத்த 4 ஏரிகளிலும், சேர்த்து 4 ஆயிரத்து 65 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த 4 ஏரிகளில் இருந்தும் 305 மில்லியன் லிட்டரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலி  கடல் நீர்  சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 180  மில்லியன் லிட்டரும்  வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டரும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டரும் இணைக்கப்பட்ட பகுதியிலிருந்து பெறப்படும் நிலத்தடி நீர் மூலம் 20 மில்லியன் லிட்டர் என சென்னையில் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் குடிநீர் மேற்கொண்ட பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு பெறப்படுகிறது.  சென்னையில், தற்போது விநியோகம் செய்யப்பட்டு வரும்,  நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் என்ற அளவே  2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடரும் என, அமைச்சர் எஸ். பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்