கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - அபராதம் வசூலிக்க குழுக்கள் அமைப்பு

கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - அபராதம் வசூலிக்க குழுக்கள் அமைப்பு
x
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இணை இயக்குனர் கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார் என்றும், மாவட்ட அளவில் பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர்  கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரி, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரி, காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதிவிக்கும் குறையாத அதிகாரி, வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம்என்று கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்