"அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் மாவட்ட வாரியாக கடன்கள் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி செப்டம்பர் 4ஆம் தேதி பிறப்பித்துள்ள ஆணையைப் பற்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
x
இந்த துறைக்கான கடன்கள் குறைவாக அளிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு , இனிமேல் அதிக அளவு முக்கியத்துவம் அளித்து, கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அந்த கடித த்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டி உள்ளார் .  ஏற்கனவே அதிக அளவு கடன் அளிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு இனி குறைவான அளவில் கடன்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதையும்  முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார் .
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும், இந்தத் துறைக்கான கடன்கள் அதிக அளவில், நல்ல முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆணை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்வர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்த கடன் தொகையை அதிகரிக்க முயற்சி செய்யாமல், அதிக கடன் பெறும் மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, குறைவாக கடன் பெறும் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு, இதற்கான நிதியை திருப்பி விட முயற்சிப்பது தவறான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . இதற்கு பதிலாக, அதிக அளவில் இத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்