பொய்யான வழக்குகள் பதியப்பட்டே ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ. தகவல்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 04:06 PM
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரிய வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. சம்பவம் நடந்த அன்று, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியே சென்றிருந்தார் என்றும், அவர் காவல் நிலையத்தில் இல்லை என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், சி.பி.ஐ. எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.  ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும்,   தற்போது ஜாமீன் வழங்கினால்,  சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு,  தீர்ப்பு அறிவிப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

397 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

319 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

125 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

46 views

பிற செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

78 views

"எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

765 views

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

92 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1146 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

74 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

202 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.