"இருமொழிக் கொள்கையில் உறுதி" - மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
x
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தேசிய கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து, விளக்கியுள்ளார். மும்மொழிக்கொள்கை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை அமலில் உள்ள இருமொழிக்கொள்கையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையையே தமிழக அரசு கடைபிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது, கிராமப்புற மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்