காணொலி காட்சி வாயிலாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
x
காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து விருதுக்கு தேர்வான திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய 2 பேருக்கு 'நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரான ஆர்.சி.சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் விருது பெற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்