தொற்று நோய் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் - விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம்

கொரோனா விதிமீறல்களுக்கு தண்டனையை கடுமையாக்கிய தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தொற்று நோய் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் -  விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம்
x
கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த விதிகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்தது. புதிய சட்டத்தின் கீழ் விதிகளை மீறுபவர்களுக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்கான அவசர சட்டம் தயார் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்