தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு - இடைக்கால தடை கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த
நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஒவ்வொரு ஆண்டுமே, மாணவர் விரும்பும் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கையில், காலிப்பணியிடங்கள் ஏற்படுவது இயல்பு என கூறியுள்ளனர். இது குறித்து மேலும் விவரங்களை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, நீதிபதிகள் கருத்து கூறினர். பின்னர், மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story