பலாத்காரம் செய்து சிறுமி கொலை - வெளியில் சுற்றும் குற்றவாளி : சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையரிடம் புகார்

மதுரவாயலில் கடந்த மார்ச் மாதம் 10 வயது சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தார்.
பலாத்காரம் செய்து சிறுமி கொலை - வெளியில் சுற்றும் குற்றவாளி : சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையரிடம் புகார்
x
மதுரவாயலில் கடந்த மார்ச் மாதம் 10 வயது சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தார். புகாரின் பேரில் வந்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சம்பவத்தில், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், ஜாமினில் வெளிவந்த அவர், தான் கொலை செய்த சிறுமியின் வீடு அருகே வசித்து வருகிறார். இதனால், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கூறிய அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், சுரேஷ் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என்றும் வினவினர்.

Next Story

மேலும் செய்திகள்