போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமான இடத்தில் வருமானவரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
x
அண்மையில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை  வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில்  முடக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றான போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர்
அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். சசிகலாவின் பினாமி நிறுவனம் என கூறப்பட்ட "ஸ்ரீஹரி சார்ந்தன" என்ற பெயரில் இந்த இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்